தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday 25 May 2016

மாவட்ட செயற்குழு 


02.06.2016 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காரைக்குடி GM ஆபிஸில் உள்ள நமது சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர்  தோழர் M. பூமிநாதன் தலைமையில்  நடைபெறும். நிர்வாகிகள் அனைவரும் வருக!

ஆய் படு பொருள்:

 1. நடந்து முடிந்த தொழிற்சங்கதேர்தல் பரிசீலனை 
 2.தல மட்ட பிரச்சனைகள் 
 3.இன்ன பிற தலைவர் அனுமதியுடன்

TNTCWU வின் மாநில உதவிச்செயலர் தோழர்.C.பழனிச்சாமி துவக்கி வைத்து சிறப்புரைஆற்று கிறார்  

 

அன்று மாலை 5 மணியளவில், தேங்கிக்கிடக்கும் உழியர் பிரச்சனைகளை
 தீ ர்த்து வைக்கும்படி காரைக்குடி மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி 
ஆர்ப்பாட்டம் நடைபெறும்


தோழமையுடன் 
P.மகாலிங்கம் 
மாவட்ட செயலர்

Friday 13 May 2016


மறுபடியும் மாபெரும் வெற்றி


     10-05-2016 அன்று நடைபெற்ற 7வது சங்க அங்கீகார 

 தேர்தலில் BSNL ஊழியர்சங்கம் 81195 (49.56% )  வாக்குகள் 

பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

   NFTE  சங்கம் 52367 ( 31.97 ) வாக்குகள் பெற்றுள்ளது.


நமது சங்கம் 50% 
க்கும் சிறிது குறைவாக வாக்குகள் பெற்றுள்ள காரணத்தால்
 NFTE  சங்கத்திற்கும் அங்கீகாரம் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளி

LOW QUOTATION NFTE படுதோல்வி
 
NFTE யின் உளறல்களை ஊழியர்கள் 
ஓரம்கட்டி BSNLEU சங்கத்திற்கு மகத்தான வெற்றியை கொடுத்து 
என்றுமே NFTE- முதல் இடத்திற்கு வரமுடியாமல செய்து தோல்வியை தழுவவைத்த BSNL ஊழியர்களை வாழ்த்துகிறோம் 
Image result for BOXING WIN







 

6வது முறையாக, ஆணி வேராக….

        BSNL ஊழியர்கள், BSNLEU சங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை மறுபடியும் தக்க வைத்துள்ளனர். இது BSNLEU சங்கத்தின் 6வது தொடர் வெற்றி.

BSNLEU மத்தியச் சங்கம் அனைத்து ஊழியர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது

BSNL கம்பெனி மற்றும் அதன் ஊழியர்களின் உயர்விற்காக BSNLEU தொடர்ந்து பாடுபடும் என்று உறுதி அளிக்கிறது.

இந்த வெற்றிக்காக கடந்த 2 மாதங்களாக உழைத்த அனைத்து மாநில, மாவட்ட, கிளைச் செயலர்களுக்கும் மற்ற அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி !

-*-*-*-

முடியட்டும், விடியட்டும் என்றார்கள் NFTE சங்கத்தினர். ஆனால், தொடர்கிறது, வளர்கிறது. எங்கே போய் முட்டிக்கொள்ளப் போகிறார்கள்? பாவம்!