தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 25 April 2014

30வது தேசியக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை

JAO / JTO தேர்வுகளின் மதிப்பீட்டில் தளர்வு:
JAO / JTO தேர்வுகளுக்கான வினாக்களில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அந்த தேர்வுகளின் விடைத் தாள்களை மதிப்பீடு செய்வதில் தளர்ச்சி செய்து மேலும் சில ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கோரபட்டது. நிர்வாகம் ஏற்கவில்லை.

OFFICIATING JTOக்களுக்கு நிரந்தர JTO பதவி உயர்வு:
1500 OFFICIATING JTOக்களுக்கு நிரந்தர JTO பதவி உயர்வு வழங்குவதற்குத் தேவையான திருத்தங்களை, பணி நியமன விதிகளில் ஏற்கனவே கொண்டு வந்திருப்பதாகவும் நிர்வாகக் குழு ஒப்புதலுக்குப்பின் நிரந்தர பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் நிர்வாகத்தரப்பு கூறியது.

பயிற்சி மேலாண்மை பதவிகளுக்கு தேர்வு எழுத NON EXECUTIVEகளுக்கு அனுமதி வேண்டும்:
NON EXECUTIVE ஊழியர்களும் தேர்வு எழுதும் வகையில் பயிற்சி மேலாளர்கள் பணி நியமன விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று ஊழியர் தரப்பில் இருந்து விவாதம் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து வலியுறுத்தியன் காரணமாக, முதல் தேர்வு முடிந்தவுடன் அதற்கான பரிசீலனை துவக்கப்படும் என்று நிர்வாகத் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

JTO / JTO சிவில் /  JTO எலெக்டிரிசல் / JAO பணி நியமன விதிகளில் திருத்தம்:
JTOக்களுக்கான நியமன விதிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. தேர்வு எழுதுவதற்கு குறைந்த பட்சம் 7 ஆண்டு சேவை புரிந்திருக்கவேண்டும் என்ற விதி, 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று நிர்வாகத் தரப்பு கூறியது. அதை 4 ஆண்டுகளாகக் குறைக்கவேண்டும் என்று ஊழியர்தரப்பு கோரியது. ஆனால் நிர்வாகத்தரப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. JTO சிவில் மற்றும் எலக்ட்ரிகல் நியமன விதிகள் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் நிர்வாகத்தரப்பு கூறியது.

காலியாக உள்ள SC / ST பதவி இடங்களை நிரப்புதல்:
நிரப்பப்படாமல் காலியாக உள்ள SC / ST பணி இடங்கள் எதுவும் இல்லை என்று நிர்வாகத் தரப்பு கூறி உள்ளது.

TSM மற்றும் தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம்:
உமாதேவி என்பவரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் காரணமாக எந்த தற்காலிக ஊழியரும் பணி நிரந்தரம் பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று நிர்வாகத்தரப்பு கூறியது.

பயிற்சிக்கால உதவித்தொகையில் மாற்றம்:
ஊதியத்தில் 70% தொகையை பயிற்சிகால உதவித்தொகையாக வழங்க வேண்டும் என்று 07.4.2014ல் உத்தரவு வெளியிடப்பட்டு விட்டது என்று நிர்வாகத் தரப்பு கூறியது. இந்த உத்தரவை 1.1.2007ல் இருந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஊழியர் தரப்பு கோரிக்கையை நிர்வாகத் தரப்பு ஏற்றுக் கொண்டது.

புதிய ஊழியர்கள் நியமனம்:
பணி இடங்கள் பல காலியாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, புதிய ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று ஊழியர் தரப்பு கோரியது. பன்முகத் திறன் கொண்ட ஊழியர்களே இன்றைய தேவை என்றும் அதற்கேற்றவாறு ஆலோசிக்கப்படும் என்றும் நிர்வாகத்தரப்பு கூறியது.

பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒருநாள் சிறப்பு விடுப்பு:
பெண் ஊழியர்களின் குடும்ப, அலுவலகப் பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மாதம் ஒரு நாள் சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும் என்று ஊழியர் தரப்பு வலியுறுத்தியது. நமது நிறுவனம் அரசு விதிகளைப் பின்பற்றுவதால் அரசு விதிகளில் இல்லாத ஒன்றை BSNLல் நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறியது.

அனைத்து NON EXECUTIVE ஊழியர்களுக்கும் ரூ.200க்கான சிம்:
அவுட்டோர் பணியிலிருக்கும் அனைத்து NON EXECUTIVE ஊழியர்களுக்கும் தற்போது ரூ.200க்கான சிம் எற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி அனைத்துப் பிரிவு NON EXECUTIVE ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இணைப்புகளையும் தொடர்பு கொள்ளும் வசதியும் அதிகாரிகளின் இணைப்புகளுடன் CUG வசதியும் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டது. இது பற்றி பரிசீலிப்பதாக நிர்வாகத் தரப்பு கூறியது.

No comments:

Post a Comment